கட்டிட தொழிலாளியை மனைவி மற்றும் கள்ளக்காதலி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை அம்பேத்கர் நகரில் இன்பராஜ் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு முத்துலட்சுமி (28) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்பராஜுக்கு அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஆனந்தி(26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே இன்பராஜ் தனது மனைவி முத்துலட்சுமியையும், உறவினரான ஆனந்தியையும் தாமரைக்குளம் அருகிலுள்ள கண்மாய்க்கு வரவழைத்து சமரசம் பேச முயன்றுள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முத்துலட்சுமியும், ஆனந்தியும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் இன்பராஜின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இன்பராஜுவை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் இன்பராஜை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முத்துலட்சுமி மற்றும் உறவினர் ஆனந்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.