திரையரங்குகளில் வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படம் பற்றிய விமர்சனம் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஃப் ஐ ஆர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபேக்கா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த படத்தின் கதைக்களம் வழக்கமான இந்து, முஸ்லிம் தீவிரவாதம் பற்றி தான் என்றாலும் கௌதம் வாசுதேவ் மேனன் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். இதைப்போல் விஷ்ணு விஷாலின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது படம் வெளியாவதால், இது இவருக்கு ஒரு கம் பேக் படமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதனை தொடர்ந்து படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது.
ஆனால் இடைவேளைக்கு பின் படத்தின் கதை மிகவும் விறுவிறுப்பான நிலை அடைகிறது. மேலும் இந்த படத்தின் ஹீரோயினை விட ரைசா வில்சன் கதாபாத்திரம் மனதில் பதியும் அளவிற்கு மிகச் சிறப்பாக உள்ளது. இந்த படம் பல சஸ்பென்ஸ் நிறைந்ததாகவும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆக மொத்தம் இந்த படத்தின் கதை வழக்கமான பார்த்த கதையாக இருந்தாலும் விஷ்ணு விஷாலின் சிறப்பான நடிப்புக்காக மேலும் பல தடவை பார்க்கலாம். இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.