Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவிலிருந்து மீண்ட ருதுராஜூக்கு ….இந்திய அணியில் இடமில்லை….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக அகமதாபாத் வந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய அணியில் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.இதனால் இவர்கள்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில்  பங்கேற்க முடியாத நிலை உருவானது.இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தவான் ,ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஏற்கெனவே தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர்.இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்டும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
இருப்பினும் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான  3-வது ஒருநாள் போட்டியில் சீனியர் வீரரான  ஷிகர் தவான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.இதனால் ருதுராஜ் கெய்க்வாட் இப்போட்டியில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என தெரிகிறது.மேலும் நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இருப்பினும்  தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்பதற்காக ருதுராஜ்  கெய்க்வாட் அவருடைய  சொந்த மாநிலமான மகாராஷ்டிரா திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |