இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் நான்கு சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிமுறை ஒன்று கடந்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த புதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விதிகள் அமல் படுத்தப்படும் பட்சத்தில் தனியார் நிறுவனங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இந்த விதிமுறைகளை அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “அரசு பணியாளர்களின் ஊதிய நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதா…?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அதுபோன்ற எந்த திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என கூறினார்.