தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று TNPSC தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்களது ஆதார் தொடர்பான விபரங்களை பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் நிரந்தரப் பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் விபரங்களுக்கு 18004190958 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.