Categories
தேசிய செய்திகள்

வாழ்வு தொடங்கியதும் அங்கே…. முடிவடைவதும் அங்கே தான்….. கண்ணீர் வரவைக்கும் சம்பவம்…!!!!

கடந்த 1990ஆம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த பண்டிட் குடும்பங்கள் சில காஷ்மீரை விட்டு இடம்பெயர்ந்து சென்றனர். அவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை குடும்பத்தினர் தங்களோடு அழைத்து செல்ல முடியாத காரணத்தினால் காஷ்மீரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்து விட்டு சென்றுள்ளனர். 30 வருடங்களுக்கு மேலாக அந்த பெண் மனநல மருத்துவமனையில் ஒரு அங்கமாகவே வாழ்ந்துள்ளார். அந்தப் பெண்ணின் தாயார் எப்போதாவது ஒருமுறை இந்த பெண்ணை என்று பார்த்துவிட்டு செல்வாராம். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிர மாரடைப்பு காரணமாக அவர் மரணத்தை தழுவியுள்ளார். அவரின் இறுதிச் சடங்கு இந்து முறைப்படி மருத்துவமனையிலேயே நடைபெற்றுள்ளது. தொடர்ந்து அந்த பெண்ணின் உடல் மயானம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் சிலரும் மருத்துவமனை ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், “அவருக்கு மனநல பாதிப்பு இருந்தாலும் ஒவ்வொரு மருத்துவரையும் அவர் பெயர் சொல்லித்தான் அழைப்பார். நாங்களும் அவரை பெயர் சொல்லி தான் அழைப்போம். அவருடைய மரணம் எங்களை கண் கலங்க வைத்துள்ளது. எங்கள் குடும்ப உறுப்பினர் போலவே அவர் இருந்தார். தற்போது அவரின் இழப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.” என அவர் கூறினார்.

Categories

Tech |