தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 3,971 ஆக இருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 3,592 ஆக குறைந்துள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் 3,592 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். 14,182 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 66,992 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,862 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 663 பேரும், கோவையில் 654 பேரும், செங்கல்பட்டில் 290 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.