Categories
அரசியல்

“வசமாய் சிக்கிய உதயநிதி….!! செம டென்ஷன் ஆன அன்பில் மகேஷ்….!!” நடந்தது என்ன..?

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக 4 நாட்களாக தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கரூருக்கு சென்றுள்ளார். அங்கு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது திமுகவில் சீனியர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதோடு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்த பிரச்சினை எழுந்தது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி கரூர் ரவுண்டானா பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஸ்டாலினை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் வந்தவர்கள் சிலர் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது என்ன ஆச்சு.? என கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் உதயநிதி ஸ்டாலினை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இது உதயநிதி ஸ்டாலின் மற்றும் செந்தில் பாலாஜியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலின் அழைத்துச்சென்று வேண்டுமென்றே செந்தில்பாலாஜி செய்துவிட்டார் என்பது போல கோபத்தில் கொந்தளித்துள்ளார். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் உள்கட்சி பூசல் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்த சூழலில் இந்த விஷயம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மிகுந்த கோபத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |