Categories
சினிமா

“தொகுப்பாளர் பிரியங்கா விவாகரத்து செய்யப்போகிறாரா”?…. சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்….!!!

பிரியங்கா விவாகரத்து செய்யப்போவதாக முக்கிய பிரபலம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் பிரியங்கா தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மக்களிடையே பிரியங்கா மிகவும் பிரபலமானவர். பிரியங்கா அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 வில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். இவர் ஒரு வீடியோவில் இது பற்றி தெள்ளத் தெளிவாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரியங்கா அண்மை காலமாக தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை மட்டுமே வெளியிடுகிறார். அவரின் கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிடவில்லை.

இதற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளதாவது, “பிரியங்காவுக்கு அவரது கணவருக்கும் சென்ற சில ஆண்டுகளாகவே பிரச்சனை ஏற்பட்டு, இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாகவே பிரியங்கா பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றார். பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி வந்தும் இதுவரை தன் கணவரை சந்திக்கவில்லை. இதை வைத்தே இச்செய்தி பரவி வருவதாக கூறி இருக்கிறார். பிரியங்காவுக்கு பெயர்,புகழ் மற்றும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டதால் இவருக்கு தலைகணம் அதிகரித்து இருப்பதாக கூறுகிறார்கள்” என அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் தெளிவாக கூறுகின்றார். பயில்வான் ரங்கநாதன் அண்மையில் கூறும் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றது. எனவே இது உண்மையாக இருக்காது என சில பேர் பிரியங்காவுக்கு ஆதரவாக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

 

Categories

Tech |