தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் 1,234 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்புக்காக பிரபல ரவுடிகள் மீது 392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 211 ரவுடிகளிடம் பிராமண பத்திரத்தில் கையெழுத்து, 7 ரவுடிகள் கைது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தேர்தல் அன்று 18,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே உரிமம் பெற்ற 1,101 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.