Categories
உலக செய்திகள்

தொடரும் வான்வழி தாக்குதல்…. 7 பேர் பலி…. அதிரடியில் ராணுவம்….!!!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் வான்வழி தாக்குதலை  நடத்தியத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனால் கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க படையின் உதவியுடன் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் அவர்களை ஒடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் வடக்கு மாகாணம் ஹைத்ரா பாலைவனத்தில் உள்ள  ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தினார்கள். மேலும்  பயங்கரவாதிகள்  பயன்படுத்திவந்த 140 மீட்டர் நீளம் கொண்ட குகையை குண்டு வீசி அழித்தனர். குறிப்பாக இந்த சம்பவத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Categories

Tech |