Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் முறைகேடுகளை தடுக்க…. மின் வாரியம் போட்ட அதிரடி பிளான்…. இனிமேல் யாரும் தப்பிக்க முடியாது….!!!!!

தமிழகத்தில் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும், மற்ற வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதை தவிர்த்து 500 யூனிட் கீழ் மின்சாரம் பயன்படுத்துபவர்களிடம் மானிய விலையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றிற்கு மேல் சென்றால் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக வருடத்துக்கு 3,650 கோடி ரூபாய் செலவாகிறது. இத்தொகையை மின் வாரியத்திற்கு மானியமாக, தமிழக அரசு வழங்குகிறது. இதனிடையில் மத்திய அரசு, மானிய செலவினங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்கு பயனாளிகளின் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட திட்டத்துடன் இணைக்க அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் காகித ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தபோது ஒரே நபர் பல முகவரிகளில் 3, 4 ரேஷன் கார்டு வைத்திருந்தனர். அந்த ரேஷன் கார்டுகளுக்கு உரிய பொருட்களை வாங்கி அதை கள்ளச்சந்தையில் விற்றனர். இதனை தடுப்பதற்கு ஆதார் எண்ணுடன் கூடிய “ஸ்மார்ட்” ரேஷன் கார்டு வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக ஒரே நபர் வேறு முகவரியில் ரேஷன் கார்டு வாங்க முடியாது. மேலும் பிற கார்டுகளில் உறுப்பினராகவும் சேர முடியாது. மின் பயன்பாட்டிலும் பல்வேறுமுறைகேடுகள் நடக்கின்றன. இதற்கிடையில் சொந்த வீடுகளை வைத்திருக்கும் பல பேர் வாடகைதாரர்களிடம் இருந்து இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கும் மின்சாரத்திற்கு பணம் வசூலிக்கின்றனர்.

அதாவது தனி சமையல் அறையுடன் கூடிய ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு வழங்க வேண்டும். இதையடுத்து விதிப்படி கூடுதல் தளங்கள் கட்டி இருந்தால், கூடுதல் மின் இணைப்பு வழங்கப்படும். ஆனால் பல்வேறு வீடுகளில் ஒரே வீட்டில் குறைந்த மின் கட்டணம் வருவதற்காக ஏசி அறைக்கு ஒரு மின் இணைப்பு “மோட்டார் பம்பிற்கு” ஒரு இணைப்பு என்று பல மின் இணைப்புகள் வைத்துள்ளனர். இதன் காரணமாக மின் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது போன்ற முறைகேடுகளை தடுப்பதற்காக மின் நுகர்வோர்களிடம் இருந்து, ஆதார் எண் பெற்று அவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மின் வாரியத்தினர் கூறியதாவது, அரசு இலவசமாக வழங்கும் 100 யூனிட் மின்சாரத்திற்கு வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் யூனிட்டிற்கு, 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஏற்கனவே மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. ஆகவே மின் நுகர்வோரிடம் ஆதார் எண் பெற்று அவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் இணைத்தால் முறைகேடு தடுக்கப்படும். மேலும் ஒரே பெயரில் பல்வேறு மின் இணைப்பு பெற்றிருப்பதும் தெரியவரும். அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அரசுக்கும் செலவு குறையும். இதனால் மீதம் இருக்கும் தொகையில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்தலாம் என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |