தமிழகத்தில் மின்சாரம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ( EB ) ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் சொந்த வீடுகளை வைத்திருக்கும் பலர் வாடகைதாரர்களிடம் இருந்து இலவசமாக அரசு வழங்கும் மின்சாரத்திற்கு பணம் வசூலிப்பது தடுக்கப்படும். அதேபோல் ஒரே பெயரில் பல மின்னிணைப்பு பெற்றிருந்தால் அது தெரியவரும் என்று கூறியுள்ளது.