நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்பொழுது அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் “சாணிக் காயிதம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித் திரைப்படமான “வேதாளம்” படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தற்போது கீர்த்தி சுரேஷின் சேலை உடுத்திய கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரும்பாலும் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள். ஏனெனில் தங்கையாக நடித்தாரல் மார்க்கெட் போய் விடுமோ என்ற பயத்தில் நடிக்க மாட்டார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய ராக்கி திரைப்படம் ரசிகர்கள் மனதைக் கவர்ந்து அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிக் காகிதம் திரைப்படத்தில் இயக்குனராக உள்ள செல்வராகவன் தற்போது நடிகராக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கொள்ளையர்களாக கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிக்கிறார்கள். சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் “வேதாளம்”. இத்திரைப்படம் தெலுங்கு ரீமேக்கில், அஜித் கதாபாத்திரத்துக்கு சிரஞ்சீவியும் லஷ்மி மேனன் கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்கள். இதுவரை குடும்ப பாங்கான பெண்ணாக நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது சேலை உடுத்தியவாரு கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் அது ரசிகர்களுக்கிடையே வைரலாகி வருகிறது.