Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…. தனுஷ் பற்றி கூறிய வீடியோ…. இணையத்தில் செம வைரல்….!!!!

நடிகர் தனுஷ் குறித்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். மாறன் படத்தையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இத்துடன் தனது அண்ணனான செல்வராகவன் இயக்குகின்ற நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கிறார் தனுஷ். செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி “புதுக்கோட்டை” படத்திற்கு பிறகு மீண்டும் தொடர்கிறது. ஆதலால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவில்லை. சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிய போவதாக கூறியிருந்தனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

https://twitter.com/TheNameIsDD/status/1491034491632365568?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1491034491632365568%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fkalakka-povathu-yaaru-tsk-says-about-actor-dhanush%2Farticleshow%2F89434153.cms

தற்பொழுது  “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் பேசியது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் “யாரிடம் திறமை இருந்தாலும் அதை வரவேற்பவர் தனுஷ்” என கூறப்பட்டுள்ளது. தனுஷ் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் இக்குணத்தை மறவாமல் இருப்பது வியப்புக்குரியது என கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |