தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் இன்று புதிதாக 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,24,476-ஆக உள்ளது.
அதேபோல் 16,473 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 33,09,032-ஆகவும், 22 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37, 837-ஆகவும் அதிகரித்துள்ளது.