Categories
மாநில செய்திகள்

‘வாழ்வில் வசந்தம் மலரட்டும்’ – முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து..!!

வழிமறிக்கும் தடைகளை தகர்த்து, வெற்றி பெற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ” புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் உளம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

மேலும், வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திட இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதியேற்போம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

Categories

Tech |