எஸ்பிஐ என்ற பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்காக 1800 11 2211 மற்றும் 1800 425 3800 என்ற, இலவச தொலைபேசி எண்கள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த எண்களில் தொடர்பு கொண்டு வங்கி சேவை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் புகார் கொடுக்க முடியும்.
இந்நிலையில் வாடிக்கையாளர் சேவை மையம் எண்களை எளிதில் நினைவு கொள்ளும் அடைப்படையில் 1800 1234, 1800 2100 என்ற, எட்டு இலக்க புதிய எண்களை எஸ்பிஐ அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக நடைமுறையில் உள்ள இலவச தொலைபேசி எண்களும் செயலில் இருக்கும் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.