தமிழகத்தில் நேற்று 4,516 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர். 20,237 பேர் குணமடைந்துள்ளனர். 1,15,898 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,20,505-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32,92,559 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,809 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நேற்று சென்னையில் 792 பேரும், கோவையில் 778 பேரும், செங்கல்பட்டில் 398 பேரும், திருப்பூரில் 276 பேரும், சேலத்தில் 251 பேரும், ஈரோட்டில் 246 பேரும், குமரியில் 122 பேரும், நாமக்கல்லில் 120 பேரும், காஞ்சிபுரத்தில் 106 பேரும், நீலகிரியில் 81 பேரும், கிருஷ்ணகிரியில் 72 பேரும், மதுரையில் 62 பேரும், கடலூரில் 59 பேரும், கரூரில் 46 பேரும், தருமபுரியில் 44 பேரும், நாகப்பட்டினத்தில் 40 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.