Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை…. (31. 12. 2019) இன்றைய ராசிபலன்!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதையும் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். இடம் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப சுமை கூடுதலாகத்தான் இருக்கும். விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வியாபார விருத்திக்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று வழக்குகளில் சாதகமான பலன்கள் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் நல்ல சிறப்பாக இருக்கும்.

மற்றவர்களால் ஏற்பட்ட பழிச்சொல் நீங்கும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் மாலை நேரத்தில் மன குழப்பம் அடைய கூடிய சூழல் இருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மாணவச் செல்வங்களுக்கு இன்று கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடந்து முடியும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். வாய்ப்புகள் கை நழுவிச் செல்லும். பண பொறுப்புக்கள் ஏற்பதை தயவு செய்து நீங்கள் தவிர்க்க வேண்டும். இன்று வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பணவரவு பல வழிகளிலும் வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனைவியின் உடல்நிலையில்  மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

பல்வேறு வகையிலும் உங்களுக்கு புகழ் இன்று சேரும். சொத்துக்களை கவனமாக பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று விருந்து சுப காரியங்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும் அதே போல வெளிவட்டாரத் தொடர்பு இன்றைக்கு விரிவடையும். பயணங்கள் மூலம் உங்களுக்கு நல்ல லாபமும், நல்ல அனுபவமும் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் அல்லது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு :

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். விடிய காலையிலேயே நல்ல தகவல்கள் வந்து சேரலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இன்று அரசியலில் உள்ளவர்கள் வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

வாழ்க்கை தரமும் உயரும். காரியத்தில் வெற்றியும் ஏற்படும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட சிறப்பாகவே இருக்கும். இன்று பழைய பாக்கிகள் வசூலாகி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் வயப்பட்டவர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பாக இருக்கும். திருமணத்தில் முடியும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

ஆதாயமும் நல்லபடியாக கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நிலையில் இருக்கும் அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண்  : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கூட்டாளிகளால் கூடுதல் லாபம் கிடைக்க கூடிய சூழல் இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று தைரியமாக வீறு நடை போடுவீர்கள். உங்கள் வேலைகளை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் மற்றும் ஏற்படலாம்.

இதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதேவேளையில் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கை துணை வழியில் உள்ள உறவினருடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

படித்த பாடத்தை எழுதி பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

இன்று  உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் ;  நீலம் மற்றும் சிவப்பு நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்கலாமா என்று சிந்தனை செய்வீர்கள். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று எந்த ஒரு பிரச்சினையையும் நீங்கள் சமாதானமாக பேசி முடிவுகளை எடுப்பீர்கள். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.

பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறை அருளும் தேவிக நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். இனி உங்களுக்கு நல்ல காலம் தான். அனைத்து விஷயங்களுமே சிறப்பாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கலும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது  ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அளவில் இருக்கும். அது மட்டும்மில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். சொத்துக்களால் லாபம் கிட்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள். கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பார்கள்.

சக மாணவர்களின் உதவிகள் கிடைக்கும். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு எடுக்கக்கூடிய முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த புகழ் பாராட்டுகளும் கிடைக்கும். இன்றையநாள் மனம் மகிழ்ச்சி கொள்ளும் நாளாகவே இருக்கும்.

செய்கின்ற முயற்சியையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய  அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஊதா நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே…!! திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெற்று மகிழ்ச்சி கூடும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவது சம்பந்தமான தகவல்களும் வரக்கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.

ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது மட்டும் ரொம்ப நல்லது.  வீண் அலைச்சலும் செலவும் கொஞ்சம் ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது எப்போதுமே நல்லது. இன்று மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனத்தை செலுத்துங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாகவே இருக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே…!!  இன்று பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகல  கூடிய சூழல் இருக்கும். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.  உங்களுடைய சிறப்பான பேச்சு வார்த்தையால் மற்றவரின் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பீர்கள். நல்ல லாபம் இருக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறக்கூடும். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகளும் உருவாகும். இன்றைய நாள் மனம் மகிழும் கொள்ளும் வாய்ப்பு இருக்கும். வீதிகளுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழ்நிலையும் இருக்கும். காதலில் ஈடுபட்டவர்களுக்கு காதல் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். அதாவது உடலில் வசீகரத் தன்மை கூடும். இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழையுங்கள்.  விளையாட்டை தயவுசெய்து ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  தெய்வீக சிந்தனை மேலோங்கும். தொழில் முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள்.  விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும்.

உங்களது திறமையான செயல்களுக்கு பாராட்டுக்களும் கிடைக்கலாம். உங்களது சேமிப்பு கொஞ்சம் குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாட்களால் பெரிய நஷ்டம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் இருக்கும். அதாவது உங்களுடைய சிந்தனையை நீங்கள் ஒரு நிலைப்படுத்தி அந்த காரியத்தை சிறப்பாக செய்யுங்கள், அது போதும். புதிய முயற்சிகளில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்தபின் படத்தை எழுதிப்பாருங்கள். விளையாட்டை தயவு செய்து விட்டுவிடுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

 

மகரம் ராசி அன்பர்களே…!!  இன்று தொழில் போட்டிகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.  துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிட்டும். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.  வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.

நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள். உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். வீடு வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமும் மன வலிமையும் ஏற்படும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் அனைத்துமே தீரும். மாணவச் செல்வங்களே கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த படத்தை எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு நல்ல சிறப்பு வாய்ந்ததாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று குறைகள் அகலும் நாளாக இருக்கும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். குழப்பங்கள் அகல நண்பர்கள் யோசனை வழங்குவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். இன்று பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும்.  தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க தாமதம் ஏற்படும்.

புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். எதை பற்றியும் கவலை வேண்டாம். மனக்குழப்பம் அடையாதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள். நிதானத்தை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் உங்களுக்கு அனைத்துமே கைகூடும். அதுமட்டுமில்லாமல் இன்று காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள். விளையாட்டை தயவு செய்து ஏறக்கட்டிவிடுவது சிறப்பு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று பணம் மழையிலும், பாச மழையிலும் நீங்கள் நனைய கூடும்.  தொழிலில் வெற்றி நடை போடுவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள்.  வாகன பராமரிப்பு செலவு இருக்கும். வீடு வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று பிள்ளைகள் வழியில் செலவு கொஞ்சம் இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள்.

புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும். வாகனங்களை மாற்றும் எண்ணம் தோன்றும். சுக அனுபவம் ஏற்படும். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இன்று அனைத்து விஷயங்களுமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல அதிர்ஷ்டகரமான சூழல் இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் அன்பு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

 

 

Categories

Tech |