Categories
அரசியல்

திமுகவை வீழ்த்த களமிறங்கும் குஷ்பூ…. பக்கா பிளான் போட்ட பாஜக…!!!!

தமிழகம் முழுவதும் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் சிற்றரசு போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இவரை எதிர்த்து பாஜக சார்பில் டாக்டர் ராஜசேகர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி போட்டியிடுவதாக பெறப்படுகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளர் சிற்றரசுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

அவருக்கு எதிராக ஆயிரம்விளக்கு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த குஷ்பூ பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பார் என பாஜக சார்பில் கூறப்படுகிறது. தற்போது குஷ்பூ லண்டனில் இருக்கிறார். அடுத்த வாரம் அவர் இந்தியா திரும்பியவுடன் ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |