அரியானாவில் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒன்றை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்ததையடுத்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக அரியானாவில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன.தற்போது பாதிப்புகள் படிப்படியாக குறைந்ததையடுத்து 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.