மின்சாரம் பாய்ந்து ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் பகுதியில் ராமச்சந்திரன்-மல்லிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தண்டபாணி, ரவி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தண்டபாணி ஜெயங்கொண்டத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து ஹோட்டலின் மேல் மாடியில் இருக்கும் அறைக்கு சென்ற தண்டபாணி சாப்பிட்டு விட்டு தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றி கை கழுவியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கீழே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தண்ணீர் பட்டதால் அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தண்டபாணி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.