Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அணிவகுப்பு மரியாதை…. வீரர்களுக்கு ஆலோசனை…. இயக்குனரின் ஆய்வு….!!

தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4-வது பட்டாலியனில் தலைமை இயக்குனர் அப்துல் கார்வால் ஆய்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாகவே வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து பேரிடர் காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் மோப்ப நாய்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

பின்னர் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்தும் மற்றும் பயிற்சிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வீரர்களுடன் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் நலம் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வீரர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதில் வீரர்களின் குறைகளை அவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

Categories

Tech |