பல நாட்கள் கழித்து நடிகர் ரஜினி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் என மக்களின் மத்தியில் பிரபலமான ரஜினி கடந்த சில நாட்களாக சொந்த வாழ்க்கையில் இருக்கும் சோகத்தால் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவகாரத்து பிரச்சினை ரஜினியை மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் யாரிடமும் பேசாமல் ரஜினி கடந்த சில நாட்களாக தனிமையில் இருந்துள்ளார். மேலும் மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் பேசுவதாக தகவல்கள் வெளியாகின.
இதன் காரணமாக லதா அவர் மகள் ஐஸ்வர்யாவிடம் நீங்கள் இருவரும் மறுபடியும் இணைந்தால்தான் அப்பாவின் கோபம் குறையும் என கூறியுள்ளார். அதனால் ஐஸ்வர்யாவும் தனுஷும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பலர் பேசி வந்த நிலையில், தற்போது ரஜினி எப்படி இருக்கிறார் என்ற கவலை ரசிகர்களிடம் வெகுவாக உள்ளது.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு அன்புசெழியன் அவரது இல்லத் திருமணத்திற்கு அழைப்பதற்காக ரஜினியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தற்போது ரஜினி பல நாட்கள் கழித்து சென்னையில் உள்ள ஒரு ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவருடன் மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா உடனிருந்தனர்.