விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கும்பகோணத்தில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த திருமண விழாவில் விஜயபிரபாகரன் கூறியதாவது, தேமுதிகவுக்கு கூட்டம் வரவில்லை, தேமுதிகவிற்கு ஆளே இல்லை என்று பேசுபவர்களின் கண்ணத்தில் அறையுங்கள். தேமுதிகவுக்கு வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்கு காரணம் அரசியல் சூழ்ச்சி தான். ஆனால் தேர்தல் களம் தேமுதிகவை சுற்றித்தான் சுழன்று கொண்டிருக்கிறது.
அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை அதனால் அவர் வீட்டில் இருக்கிறார். குகையில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். எனக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் மீண்டும் தேமுதிக பழைய நிலைக்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். விஜயபிரபாகரன் இவ்வாறு பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது விஜயகாந்தை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே விஜயகாந்த் அடிக்கடி விஜய பிரபாகரனை அழைத்து பொது இடங்களில் எல்லாம் பேசக்கூடாது உனக்கு வயது பற்றவில்லை..! அரசியலில் நீ இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும்.” என அட்வைஸ் செய்துள்ளாராம்.