Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup 2022 :இந்தியா VS பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை …. ஐந்தே நிமிடங்களில் காலி ….!!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி 2022 வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி தொடங்க உள்ளது.

ஐசிசி டி20 உலககோப்பை போட்டி 2022 அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டி மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய இடங்களில்  நடைபெறுகிறது .இதனால் உலகக் கோப்பை போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதில் 2 போட்டி நாட்களுக்கான டிக்கெட் விற்பனை வந்த முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது.

குறிப்பாக அக்டோபர் 23-ம் தேதி மெல்போர்னில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி மற்றும் அக்டோபர் 27-ம் தேதி சிட்னியில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா – பங்களாதேஷ் மற்றும் இந்தியா -குரூப் ஏ ரன்னர்-அப் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.

இதில் குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடங்களிலேயே விற்பனை செய்யபட்டுள்ளது.மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள  45 போட்டிகளில் முன் விற்பனையில் மட்டும் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டது. அதேசமயம் இப்போட்டிகளை காண 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |