லதா மங்கேஷ்கர் நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக நேற்று போபாலில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், லதா மங்கேஷ்கர் பிறந்த ஊரான இந்தூரில் மியூசிக் அகாடமி மற்றும் அவர் பாடிய அனைத்து பாடல்களும் இடம் பெறும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கூறினார்.
மேலும் இந்த ஊரில் லதா மங்கேஷ்கர் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் எனவும், அவர் பெயரில் விருது வழங்கப்படும் என சிவராஜ்சிங் சவுகான் அறிவித்தார். இந்தூரில் லதா மங்கேஷ்கருக்கு சிலை வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.