கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பாலிவுட்டின் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் திருமணம் செய்யாததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
லதா மங்கேஷ்கர் பாலிவுட்டின் முன்னணி பாடகியாக திகழ்கிறார். இவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தெற்கு மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பார்க்கில் தகனம் செய்யபட்டுள்ளது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்வதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது லதா மங்கேஷ்கருக்கு 13 வயது இருக்கும் பொழுது அவருடைய தந்தை உயிரிழந்துள்ளார்.
இதனால் தனது தம்பி மற்றும் தங்கைகளை அவர்தான் பார்த்துக்கொள்ளும் படியான கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலைதான் முதலாவதாக அவர் திருமணம் செய்துகொள்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதன்பின்பு லதா மங்கேஷ்கரின் பி.சி.சி.ஐயின் முன்னாள் தலைவருடனான காதலே அவர் திருமணம் செய்து கொள்ளாததற்கான 2 ஆவது காரணமாக அமைந்துள்ளது. அதாவது பி.சி.சி.ஐயின் முன்னாள் தலைவரான ராஜ் சிங் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய தந்தை பணக்கார வீட்டு மருமகள் தான் வர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் தந்தையின் பேச்சை மீறாத ராஜ் லதா மங்கேஷ்கர் உடனான காதலை முறியடித்துள்ளார். இந்த இரண்டு காரணங்களால் தான் லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.