கனடாவில் தேடப்பட்டு வந்த நபரொருவர் 3 நாட்களாக தனது காரின் பின்பகுதியில் மறைந்திருப்பதை கூட தெரியாமல் இளம் பெண்மணி ஒருவர் பயணம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கனடாவிலுள்ள கொலம்பியாவில் பெத்தானி என்ற இளம் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய கார் சீட்டில் சேறு படிந்த கால்தடங்கள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெத்தானி யாரோ இரவில் தனது காரில் வந்து தங்கியுள்ளார் என்று நினைத்து அந்த காலடி தடத்தை சுத்தம் செய்துள்ளார். அதேபோல் மறுநாளும் அந்த பெண்மணியின் கார் கண்ணாடியில் மூச்சு விடுவதால் ஏற்படும் ஆவி படர்ந்திருப்பதை கவனித்துள்ளார்.
இதனால் எழுந்த சந்தேகத்தின் பேரில் பெத்தானி தனது காரின் பின் பகுதியில் சென்று பார்க்க அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் பெத்தானின் காரின் பின்புறத்தில் சுத்தமில்லாத ஆடை அணிந்து கொண்டு தேடப்பட்டு வந்த நபரொருவர் 3 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
இதனை தெரியாமலேயே பெத்தானி 3 நாட்கள் கார் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெத்தானி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் தேடப்பட்டு வந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.