சுவிட்சர்லாந்திலுள்ள கோழி பண்ணை ஒன்றில் பறவைகளால் இனி முட்டையிட முடியாத Newcastle என்னும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஸ்விட்சர்லாந்திலுள்ள சூரிச் மாநிலத்தில் கோழிப்பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இந்த கோழி பண்ணையில் பறவைகளால் இனி முட்டையிட முடியாத மிக ஆபத்தான நியூகாசில் என்னும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்று மனிதர்களுக்கும் பரவக்கூடிய மிக ஆபத்தான ஒன்றாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த நியூகாசில் தொற்று கோழிப்பண்ணைக்கு காட்டு பறவைகளிலிருந்து பரவியிருக்கலாம் என்று சூரிச் பல்கலைக்கழக நிபுணர்கள் முன்னெடுத்து ஆய்வில் கூறியுள்ளார்கள். இதற்கிடையே பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூகாசில் தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகளை கொல்லும் நடவடிக்கைகளில் அந்நாட்டின் சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.