நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது அனைவருக்கும் வீடு என்ற திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி கிடைக்கும் . தகுதியுடைய பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் 2.67 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் இதுவரையில் மொத்தம் 17.68 லட்சம் பேருக்கு ரூ.41,415 கோடி வரையில் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது . இந்த திட்டம் குறித்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில். “இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் முழு முயற்சியுடன் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். அதோடு கடன் இணைப்பு மானியத் திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.5,320 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.