Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை… முழு ராசிபலன் இதோ..!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாளாக இருக்கும். சில பணிகள் மாறலாம். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க இயலாது. விரயங்கள் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. இன்று வயிறு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது சிறப்பு. பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.

சேமித்து வைப்பது ரொம்ப நல்லது. மாணவர்கள் இன்று மிகவும் கவனமாக படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அலட்சியப் போக்கை கைவிடுவது ரொம்ப சிறப்பு. கலைத்துறையினருக்கு கவுரவம் இன்று உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இன்று அன்பு இருக்கும். எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்று பயணங்களை மேற்கொள்ளும் பொழுது ரொம்ப கவனமாக மேற்கொள்ளுங்கள்.

கூடுமானவரை பொருட்கள் மீது கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று தொலைபேசி வழி செய்தி சிந்திக்கவைக்கும் நாளாக இருக்கும். உங்களின் செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். இன்று வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.உங்கள் திறமைக்கேற்ற புகழும் பாராட்டுகளும் கிடைக்காமல் போகலாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே…!!  இன்று நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாகவே வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர்களுடைய திறமை இன்று பளிச்சிடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. சரியான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் கூட ஒற்றுமை இருக்கும். அதுமட்டுமில்லாமல் காதல் கைகூட கூடிய சூழல் இருக்கு.

இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

 

கடக ராசி அன்பர்களே…!! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்படையும் நாளாகவே இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் தொல்லை கொஞ்சம் இருக்கும். இன்று குடும்பத்தில் குழப்பம், பணத்தட்டுப்பாடு போன்றவை ஏற்படலாம். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள்.

குடும்பத்தில் பல ஆறுதலான விஷயங்கள் நடக்கும். எவ்வளவு பிரச்சினை ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. தொழில் போட்டிகளும் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனசுக்குப் பிடித்த ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

 

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள் ஆகயிருக்கும். கனவு பலிக்கும். காலை நேரத்தில் மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். இன்று திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.

தொழில் வியாபாரத்தில் நண்பர்களுடன் இருந்த பிரச்சனை தீரும். மனதில் அவ்வப்போது ஏதாவது கவலை இருக்கும். வீண் அலைச்சல் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத சலுகை கிடைக் காமை போன்று இன்று ஏதாவது ஒரு பிரச்சனை ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அது உங்களுக்கு மன சோர்வை ஏற்படுத்தும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். நிலம் பூர்விக சொத்து வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகிச்செல்லும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இன்று ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட கூடும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. சரக்குகளை அனுப்பும் போதும் அதனை சேமித்து வைக்கும்பொழுதும் ரொம்ப கவனமாக இருங்கள். பிள்ளைகள் உடல்நிலையில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புடன் இருப்பது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

 

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பிடிவாத குணத்தை தளர்த்தி கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். பொது வாழ்வில் எதிர்பார்த்தபடி பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகன மாற்றம் செய்வது பற்றி சிந்தனை மேற்கொள்வீர்கள். இன்று எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்துசேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு இன்று குறையலாம்.

வாகனம் வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது கொஞ்சம் ஏற்படலாம். எதையும் செய்யும் முன் தயக்கம் கொஞ்சம் ஏற்படும். வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படுவதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கூட கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். அதேபோல கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று உத்தியோகத்தில்   உயர்வு கிட்டும் நாளாக இருக்கும். உயர்மட்ட அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பார்கள். நண்பர்களுக்காக சில காரியங்களை செய்ய முன்வருவீர்கள். இளைய சகோதரத்தால் இனிய செய்தி ஒன்று வந்து சேரும். இன்று சில காரியங்கள் சரிவர முடியாமல் போக பேச்சே ஒரு காரணமாகி விடும். கூடுமானவரை பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்னியர் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும். சொத்துக்கள் வாங்குவதில் வில்லங்கம் ஏற்படலாம். மிகவும் எச்சரிக்கையாக செயல்படுங்கள். மனைவியின் உடல்நிலையில் மிகவும் கவனமாக இருங்கள். எதிர்பாலித்தனவருடன் பழகும் போது மிகவும் கவனமாகப் பழகவேண்டும். சுறுசுறுப்பு குறைந்து சோர்வு கொஞ்சம் ஏற்படலாம். எனவே வீண் அலைச்சலை தவிர்ப்பது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று துவண்டு போன வாழ்க்கையை தூக்கி நிறுத்தும் நாளாக இருக்கும். சேமிப்புகளை உயர்த்துவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இன்று  உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவரப் புரிந்துகொள்ளாமல் உங்களை விட்டு பிரிந்து செல்லக் கூடும்.

திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டியிருக்கும். பணவரவு இன்று இருக்கும் இருந்தாலும் செலவும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் அதனை உறுதிசெய்து செய்வது ரொம்ப நல்லது. இன்று மாணவர்கள் கொஞ்சம் தயக்கம் இல்லாமல் ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு பாடங்களைப் படியுங்கள்.

அதுமட்டுமில்லாமல் படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும்  வெள்ளை நிறம்

 

மகரம் ராசி அன்பர்களே…!!  இன்று தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்கள் வழியில் அன்பு தொல்லைகளை சந்திக்க நேரிடும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும்.

அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது மட்டும் நல்லது. பண விஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதே தவிர்ப்பது நல்லது. இன்று ஆதாயம் ஓரளவு சிறப்பாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் முயற்சி எடுத்து பாடங்களைப் படியுங்கள் சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று இதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தொழில் நலன் கருதி முக்கிய முடிவு எடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றச் சிந்தனை ஏற்படும். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் லாபம் தடைபடாது.

பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்திற்கு தடை தாமதம் வந்தாலும் அவை வந்து நீங்கும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி விரிவாக்கம் செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும். இன்று நீங்கள் கொஞ்சம் பொறுமையும் நிதானத்தையும் கலந்து மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுவது  ரொம்ப சிறப்பு. இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் கல்வியில் முன்னேற்றமும் அடைவார்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று சிந்தித்து செயல்படவேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் கரையும். சீரான உடல் நிலை மீண்டும் தொல்லைக் கொடுக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். குடும்ப சுமை கூடுதலாகத்தான் இருக்கும். கவலை கொஞ்சம் இருக்கும். இன்று அதிக உழைப்பும் குறைந்த வருவாயும் கிடைக்கும். நல்லது கெட்டது என பிரித்துப் பார்ப்பதில் இன்று வல்லவராக இருப்பீர்கள்.

அதே போல சிறிய தடுமாற்றங்களும் ஏற்படும். சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்தியோக நிமித்தமாக வெளியில் சென்று தங்க நேரிடும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது ரொம்ப நல்லது. அடிக்கடி கோபமாக பேச நேரிடும் கோபத்தை மட்டும் இன்று கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள். ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |