Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் திருமணம்…. “நிதிஅகர்வால் சொன்னது உண்மைதான் போல இருக்கே”…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

நிதி அகர்வால் சொன்னது உண்மையென தற்போது அனைவரும் நம்புகின்றனர்.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவிற்கு கூடிய சீக்கிரம் திருமணம் நடத்திவிட வேண்டும் என அவரின் பெற்றோர்கள் விரும்புகிறார்கள். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் சிம்புவின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். சிம்புவின் ரசிகர்கள் இந்த வருடம் சிம்புவிற்கு கல்யாணம் ஆகிவிடும் என எண்ணினர். ஆனால் சிம்புவின் பிறந்தநாள் அன்று திருமணம் குறித்து எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. சிம்பு உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்கும் வீடியோ ஒன்றைத்தான் வெளியிட்டிருந்தார்.

நடிகர் சிம்புவும் நடிகை நிதி  அகர்வாலும் காதலிக்கிறார்கள் என்று அனைவரும் பேசினார்கள். ஆனால் இச்செய்தியை அறிந்த நிதி அகர்வால் நானும் சிம்புவும் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறினார். நிதி அகர்வால் இதைப்பற்றி கூறியும் யாரும் அவரை நம்பவில்லை. இதையடுத்து சிம்புவின் பிறந்த நாளன்று இதைப் பற்றி எந்த செய்தியும் வெளிவரவில்லை. அப்போது தான் நிதி அகர்வால் கூறியது உண்மை என அனைவரும் நம்பினார்கள். ஆனால் ரசிகர்களின் ஆசை ஒன்றே ஒன்றுதான். அது சிம்பு, கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

Categories

Tech |