இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, வீரர்கள் எனக்காக இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் உடைய ஒருநாள் போட்டியானது நடந்து முடிந்திருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் முதலில் களமிறங்கிய நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மொத்தமாக 176 ரன்கள் தான் எடுத்தது.
அதன்பின் ஆடிய இந்திய அணி, 28 ஓவர்களில் 178 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுவிட்டது. அதன்பின், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்ததாவது, “நம்மால் மிகவும் சரியாக இருந்துவிட முடியாது. தவறுகள் மூலமாக பாடம் கற்றுக் கொண்டு நம்மைத் திருத்திக் கொண்டு தான் இருக்க முடியும்.
இன்றைக்கு அனைவரும் சிறப்பாக செயல்பட்டார்கள். இதே போன்று வீரர்கள் இருக்க வேண்டும், என்பது தான் என் ஆசை. வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களின் சாதனைகளை நீங்களே முறியடிக்க தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள்.
அப்போது தான் தொடர்ந்து நம்மால் முன்னேற முடியும். இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை. எனினும் இன்று சிறப்பாக விளையாடியது என் மன பலத்தை அதிகப்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.