மகாராஷ்டிராவில் ஆற்றுமணல் எடுக்கப்பட்ட குழியில் விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பீத் மாவட்டத்தில் உள்ள கெவ்ரை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆற்றுமணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. 20 அடி வரையிலான குழிகள் வரை தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்று மணல் அள்ளும் கும்பல் தோண்டி வைத்து குழியில் தவறி விழுந்து பப்லு குணாஜி வாக்டே, கணேஷ் பாபுராவ் இன்கார், ஆகாஷ் ராம் சொனவான்னே, அமொல் சஞ்சய் ஆகிய 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அந்த பகுதி மக்கள் பல தடவை வட்டாட்சியரிடமும் , சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகாரளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும் இதனால் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சிறுவர்களின் உடலை வாங்கப் போவதில்லை என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.