Categories
சினிமா தமிழ் சினிமா

“உடம்புல உயிர் உள்ளவரை அவர மன்னிக்க மாட்டேன்”…. நடிகர் சூரியை விளாசி தள்ளிய விஷ்ணு விஷால்…!!!

உடம்பில் உயிர் உள்ளவரை சூரியை மன்னிக்க மாட்டேன் என விஷ்ணு விஷால் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் தன்னை தொடர் வெற்றி நாயகனாக வைத்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அவர் எஃப்ஐஆர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் நடிகர் சூரி க்கும் இடையே பிரச்சினை இருப்பது நமக்கு தெரிந்ததுதான். விஷ்ணு விஷாலும் அவரது அப்பாவும் சேர்ந்து சூரியிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக ஒரு செய்தியை  கூறியிருந்தார் நடிகர் சூரி. இந்த செய்தி காட்டுத் தீயை விட அதிகமாக பரவி விஷ்ணு விஷாலின் குடும்பத்தினருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தந்தது.

இதற்கு விஷ்ணு விஷால் அவரை ஏமாற்றி பிழைக்கும் அளவுக்கு நாங்கள் இல்லை எனவும் தனது அப்பா பெரிய பதவியில் இருந்தார் என்றும் தன்னுடைய தரப்பு நியாயத்தை வைத்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் விஷ்ணுவிஷால் கொடுத்த பேட்டி ஒன்றில் சூரி உடன் நடித்த அந்த படம் வெற்றி பெற்றால் கூட அது எனக்கு தேவை இல்லை எனவும், அவர் என்னை மட்டும் இல்லை என்னுடைய தந்தையையும்  அசிங்கப்படுத்தி விட்டார் என்றும், தன்னுடைய மனக்குமுறலை கூறியுள்ளார். மேலும் உடம்பில் உயிர் உள்ளவரை சூரியை மன்னிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |