கேரளாவில் சிகிச்சைக்கு வந்த மாணவனிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கேரளாவின் திருவனந்தபுரத்தில் மணக்காடு எனும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மனநல மருத்துவரான கிரீஷ் (58) இவர் மனநலம் குறித்த டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2017 ம்ஆண்டு திருவனந்தபுரத்தில் 8 ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சரிவர படிக்காமல் இருந்த காரணத்தால் அவர்களது பெற்றோர்கள் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு மன நல மருத்துவர் கிரீஷ்ஷிடம் சென்றுள்ளனர் .
அங்கு அந்த மாணவனை பரிசோதிக்க வேண்டும் என தனியாக அழைத்துச் சென்ற மருத்துவர் சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுட்டப்பட்டதாக கூறப்படுகிறது . மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என அந்த சிறுவனை மருத்துவர் மிரட்டியுள்ளார். இந்நிலையில் அந்த மாணவனின் பெற்றோர் சிறுவனின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடித்த போது மருத்துவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவனின் பெற்றோர் திருவனந்தபுரம் போர்ட் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்தனர் . மேலும் இவர் இதுபோன்று முன்பே ஒரு மாணவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், மற்றும் சிகிச்சைக்கு வந்த திருமணமான பெண்ணை வன்கொடுமை செய்ததாகவும் மருத்துவர் கிரீஷ் மீது புகார்கள் இருக்கின்றது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.