கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இந்த திருப்புதல் தேர்வுக்கு முதன்முறையாக மாநிலம் முழுவதும் ஒரே வகையான வினாத்தாள் வினியோகிக்கப்படுகிறது. இந்த தேர்வை தேர்வுத் துறையின் கீழ் அனைத்து வகையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எவ்வாறு நடைபெறும் அதேபோல் திருப்புதல் தேர்வு நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு திருப்புதல் தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீடு செய்யக்கூடாது. எனவும் முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தலின்படி தான் திருப்புதல் தேர்வு மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.