கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று இதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தொழில் நலன் கருதி முக்கிய முடிவு எடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றச் சிந்தனை ஏற்படும். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் லாபம் தடைபடாது.
பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்திற்கு தடை தாமதம் வந்தாலும் அவை வந்து நீங்கும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி விரிவாக்கம் செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும். இன்று நீங்கள் கொஞ்சம் பொறுமையும் நிதானத்தையும் கலந்து மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுவது ரொம்ப சிறப்பு. இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் கல்வியில் முன்னேற்றமும் அடைவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்