அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் துரைமுருகன் கூறியது வடிகட்டின பொய் என்று கூறியிருக்கிறார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சர் துரைமுருகன் திமுக ஆட்சி நடந்த போது தமிழ்நாட்டில் நீட் தேர்வு கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். கடந்த 2010-ஆம் வருடத்தில் டிசம்பர் மாதத்தில் கையெழுத்திட்ட திமுக, 2011-ம் வருடத்தில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஐந்து மாதங்களில் ஆட்சியை இழந்தது.
அப்படி இருக்கும்போது திமுகவின் ஆட்சி காலத்தில் எப்படி நீட் தேர்வு வந்திருக்கும்? ஆகவே மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில் நீட் தடுக்கப்பட்டது என்று துரை முருகன் கூறியது வடிகட்டின பொய் என்று குறிப்பிட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் 2010ஆம் வருடம் நீட்டிற்கு திமுக ஆதரவு தெரிவித்தது.
தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்ததால், மீண்டும் 2012ம் வருடத்தில் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான கருத்தை கூறியது. மேலும் அப்போது இருந்த திமுக தலைவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது, “நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் திமுகவின் கருத்து எனவும் மருத்துவப் படிப்பிற்காக மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன எனவும் மத்திய அரசு இதனை தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது”.
திரு.மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது என்ற திரு.துரைமுருகன் அவர்களின் வாதமே வடிகட்டின பொய். செய்த தவறை ஒத்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு அளித்த அதிமுகவை குறை சொல்வது கண்டனத்திற்குரியது. pic.twitter.com/N2hsJURIsS
— O Panneerselvam (@OfficeOfOPS) February 6, 2022
மத்திய அரசில் இருந்துகொண்டே தகவல் வருகிறது என்று அறிக்கை வெளியிடுகிறார்கள். இதிலிருந்து எந்த அளவிற்கு நீட் தேர்வு ரத்து தொடர்பில் திமுக அக்கறையின்றி செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தருவதற்கு தயங்கமாட்டோம்.
காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? என கேட்டால் எங்களுக்கு காரியம் தான் பெரிது. எனவே தான் ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் மதுரையில் எய்ம்ஸ் போன்ற பல்வேறு நல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது துரைமுருகனுக்கு புரிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.