அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல நலத்திட்டங்களை மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக திட்டமிட்டுள்ளது எனவும் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது என்பது மத்திய அரசு fitment factorஐ உயர்த்துவதாகும்.
இதன்படி அவர்களின் குறைந்தபட்ச ஊதியம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்காக பல ஆண்டுகள் ஊழியர்கள் போராடி வந்த நிலையில், அதாவது fitment factor 2.57 இருந்து 3.68ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் ஊழியர்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர்.
இந்த அறிவிப்பின் மூலம் அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.26 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது 2.57 fitment factor அடிப்படையில் 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தில் இருந்து fitment factor 3.68 உயர்த்தப்பட்டு அடிப்படை சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் எனவும் அதாவது அடிப்படை சம்பளமே 8000 ரூபாய் வரும் எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.