Categories
அரசியல் மாநில செய்திகள்

நேர்ல போய் சொல்லி… மோடி கிட்ட பேசி… பம்பரமாய் சுழன்ற திமுக… தேதி வாரியாக பட்டியலிட ஸ்டாலின் …!!

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே ராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தோம். அந்த கமிட்டியின் அறிக்கையை பெற்று சட்டமன்றத்திலே விவாதத்து இருக்கோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அதன்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9. 2021 அன்று மசோதாவை நிறைவேற்றினோம். இந்த சட்ட முன்வடிவை உடனடியாக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கனும்.

ஆனால் அவர் அந்த அரசியல் சட்ட கடமையை செய்யல. அதனால் நானே  27.11. 2021 அன்று நேரில் சென்று ஆளுநரிடத்தில் வலியுறுத்துகின்றேன். அதைத்தொடர்ந்து நம்முடைய அமைச்சரவையில் இடம்பெற்று இருக்க கூடிய மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் 17.12.2021 ஆளுநரை நேரில் சென்று வலியுறுத்தி இருக்கிறார். அது மட்டுமன்றி 28.12.2021 அன்று அனைத்து கட்சி எம்பிக்களுடன் குடியரசு தலைவர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்திருக்கின்றோம்.

உள்துறை அமைச்சரை சந்திக்க இயலாத சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் என்ற முறையில் நான் கூட்டினேன். அதாவது 8.1.2022 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு நீங்கள் எல்லாம் வருகை தந்து ஆலோசனைகள் எல்லாம் வழங்கினீர்கள். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

ஜனவரி 12-ஆம் தேதி தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார். அப்பகூட காணொளி வாயிலாகவே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்குமாறு நான் வலியுறுத்தி பேசி இருக்கின்றேன். அதைத் தொடர்ந்து 11.1.2022 அன்று நம்முடைய நாடாளுமன்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.ஆர் பாலு அவர்கள் தலைமையில், நம்முடைய தமிழ்நாட்டில் இருக்க கூடிய அனைத்து கட்சியினுடைய எம்பிக்கள் குழு , ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து,  இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது.

2007இல் 87 நாட்களுக்குள் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தார்.  ஆனால் 13.9. 2021இல், நாம்  நீட் தேர்வு தேவையில்லை,  மாணவர்களை கொல்லும் இந்த தேர்வில் இருந்து  விலக்கு அளியுங்கள்  என்று நிறைவேற்றி இருக்கக்கூடிய சட்ட முன்வடிவை நம்முடைய ஆளுநரே 142 நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து, இந்த ஆண்டுக்கான நிறைவு தேர்வு முடிவுற்று, மாணவர் சேர்க்கை தொடங்கிய பிறகு சட்டமன்ற மீண்டும் பரிசீலிக்க வேண்டும் அப்படி என்று சொல்லி, 1.2.2022 அன்று அதை திருப்பி அனுப்பியுள்ளார்.

Categories

Tech |