Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….!! ஒரு வருடத்திற்குள் 75% வாக்குறுதிகள் நிறைவேற்றம்….!! மு.க ஸ்டாலின் பெருமிதம்…!!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக காணொலி காட்சி வாயிலாக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதில் பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம ஆட்சி தொடரட்டும் என கூறினார். ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவில் அதற்குள்ளாகவே 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி விட்டோம் என பெருமிதம் தெரிவித்தார்.

Categories

Tech |