பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரியை உடனே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வரிவசூல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் குடிநீர் கட்டணம் ரூபாய் 3 கோடி, சொத்து மற்றும் வீட்டு வரி ரூபாய் 2 கோடி பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வசூலிக்க கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அதாவது வரி பாக்கி வைத்துள்ள வர்த்தக நிறுவனங்கள் மீது கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாகூர் அருகே கன்னியகோவிலில் உள்ள வணிக வளாகத்தில் ரூபாய் 2 லட்சம் வரி பாக்கி செலுத்தாமல் இருந்த கடைக்கு சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையானது தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே குடிநீர் மற்றும் வீட்டு வரியை பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் உடனே செலுத்த வேண்டும் என்று பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.