பல ஆண்டுகளாக நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்பது பேசும் பொருளாகவே இருந்து வந்தது. இதையடுத்து நடிகர் ரஜினி 2017-ஆம் ஆண்டில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இருப்பினும் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் ? என்பது பற்றி தெளிவாக குறிப்பிடாமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகர் ரஜினி தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார்.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் பாஜக அரசு, மகாராஷ்டிர மாநிலத்தை சார்ந்த ஒருவருக்கு குடியரசு தலைவர் பதவியை வழங்க இருப்பதாகவும், நடிகர் ரஜினிக்கு தான் குடியரசுத் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் பரபரப்பு தகவல் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.
தற்போது ராம்நாத் கோவிந்த் இந்திய குடியரசு தலைவர் பதவியில் உள்ளார். இவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் ? என்பதை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். எனவே டெல்லியில் அடுத்த குடியரசு தலைவர் யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.