Categories
உலக செய்திகள்

“ஆஹா!”… செம்ம ஆஃபர்…. தடுப்பூசி செலுத்தியிருந்தா போதும்…. இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பு…!!!

இண்டிகோ நிறுவனமானது, கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு டிக்கெட்டுக்கான விலையில் 10% தள்ளுபடியளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்ட பயணிகள் இண்டிகோ நிறுவனத்தின் டிக்கெட் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம். இதற்காக, Vaxe Fare என்ற புதிய திட்டம், இண்டிகோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தடுப்பூசி செலுத்தியவர்கள், இந்நிறுவனத்தினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தவர்களுக்கு  மட்டும் தான் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சலுகையை பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தள்ளுபடி செல்லுபடி ஆகாது.

Categories

Tech |