ஈரோடு, கோபிசெட்டிபாளையம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கருக்குப்பாளையம் புதூர் கிராமத்திற்குள் சிறுத்தையை பார்த்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து 13 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மயக்க ஊசி பொருத்திய துப்பாக்கியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே காந்தி நகர் பகுதியில் சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்ததையடுத்து மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.