Categories
தேசிய செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான…. நீட் தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 12-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் மத்திய அரசு 8 வாரங்களுக்குப் பிறகு நீட் தேர்வை ஒத்திவைத்ததுள்ளது.

மார்ச் மாதம் 12-ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற இருந்தது. இதைத்தொடர்ந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் இத்தேர்வை தள்ளிவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த விசாரணை மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் மற்றும் சூரியகாந்த் ஆகியோர் முன்பு பட்டியலிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மத்திய அரசு முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

இந்த ஒத்திவைப்பு மத்திய சுகாதார மந்திரி மன்சூர் மன்சுக் மண்டாவிய உத்தரவின்பேரில் சுகாதார பணிக்கான தலைமை இயக்குனர் ஒத்திவைப்பு ஆணையை பிறப்பித்தார்.மேலும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தேதி மற்றும் கடந்த ஆண்டு முதுநிலை நீட் தேர்வு தெரியவர்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு தேதியும் ஒரே நாளில் வருவதால் நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |