Categories
விளையாட்டு

“ரஞ்சி போட்டிக்கு போங்க… வெற்றியோடு வாங்க….!” 2 சீனியர் வீரர்களுக்கு கங்குலி சொன்ன அட்வைஸ்…!!

இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் ரகானே சமீபகாலமாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவது இல்லை எனவும் அதனால் அவர்களை கிரிக்கெட் அணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இவர்கள் சரியாக விளையாடவில்லை. ஆனாலும் பிபிசி இவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது .பிபிசி தலைவர் கங்குலி இதுகுறித்து கூறுகையில்,

“இருவரும் ரஞ்சி போட்டிகளில் அதிக ரன்களை குவித்து மீண்டும் பார்முக்கு திரும்புவார்கள் என நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். அதோடு சர்வதேச போட்டிகளில் விளையாடிய பின்னர் ரஞ்சி போட்டிக்கு செல்வதால் எந்த பிரச்சனையும் இருக்காது என நான் நினைக்கிறேன். நாங்கள் கூட ரஞ்சி கிரிக்கெட் தொடரில் விளையாடி உள்ளோம்.” எனக் கூறினார்.

Categories

Tech |